இன்று (11-Dec-2006) பாரதியின் பிறந்த தினம்!!
இவணை பற்றி என்ன என்று சொல்வது?? சில சமயங்களில் பாரதியை பற்றி நினைக்கும் பொழுது எனக்கு ஏதோ, என்றோ இறந்து போன என் சகோதரன் போன்ற அன்பும் பாசமும் பொங்கி வரும்.(ஏக வசனத்தில் பேசுவதும் அந்த உரிமையில்தான்)
இவணை பற்றி பேசுவதற்க்கு எனக்கு தகுதியோ,திறமையோ எள்ளளவும் கிடையாது. ஆனாலும் உற்ச்சாக மிகுதியால் ஆர்க்குட் வலைதளத்தில் பிதற்றிய சில வரிகள் இங்கே !!
http://www.orkut.com/CommMsgs.aspx?cmm=1990919&tid=2491003032949304534
வாழ தெரியாதவன் என்ற உலகத்தார் மத்தியில்
வாழ்க்கை என்றால் என்ன என்று வாழ்ந்து காட்டியவன்
பயம்,அச்சம்,சிறுமை,மூடம்
இவைகள் சுற்றி சூழ்ந்திருந்தும்,ஞாயிராய் ஒளிர்ந்தவன்
குழப்பம் அடர்ந்த உலகம் மிரட்ட
தீயை போன்று இருளை எதிர்த்தவன்
வறுமை தினமும் வலியை கொடுத்தும்
திறமை கொண்டு வேதனை விரட்டியவன்!!
தமிழ் மேல் எந்தன் காதலை வளர்த்தவன்
கவிகளால் வழிநடத்தும் காவியத்தலைவன்!!
Tuesday, December 12, 2006
[+/-] |
பாரதியின் பிறந்ததினம் |
Subscribe to:
Posts (Atom)