* Wrote this long back!again spurred by orkut!
Iam sure of you might think that i wrote this coz i felt lonely!!
That aint true!!
I love to be alone and this poem needs to be taken in artistic sense and nothing more! [:)]
தனிமை
---------
கண் சிமிட்டும் கணிணி
கை அருகில் பாடல் கருவி
குழுமியிருக்கும் மின் அணு சாதனங்கள்
ஆனாலும் அறை முழுதும் வெறுமை
இதன் பெயர் தான் தனிமை
குளிர்சாதன பெட்டியில்
உணவு வகைகளின் பட்டியல்
சமைக்க செல்லாத மனது
சுவர் ஓரத்தை வெறித்திருக்கும்,இமைக்காத விழி அது
இதன் பெயர் தான் தனிமை
ஆயிரம் நண்பர்கள் இணையத்தில்
மின் அரட்டை ஆரம்பிக்கலாம் நொடியில்
ஓசை கேட்காத பல நூறு குரல்கள்
பார்க்க முடியாத பல நூறு சினேகங்கள்
இதன் பெயர் தான் தனிமை
தலை மேலே அம்மாவின் ஸ்பரிசம்
திரும்பி பார்த்தால் காற்றுதான் முறைக்கும்
மூச்சை முட்டும் அளவு நினைவுகளின் கூட்டம்
ஆனால் கண்களில் மட்டும் கண்ணீர், துடைக்காமல் இருக்கும்
இதன் பெயர் தான் தனிமை
அழ வேண்டும் என்று இனம் புரியா ஆவல்
காரணம் இல்லாததால் அது மனதினுள் காவல்
அயல்நாட்டில் அடைந்திருக்கும் இளைஞர்களின் நிலைமை
தமிழ் என்ற தோழி மட்டும் துணையிருக்கும் கொடுமை
இதன் பெயர் தான் தனிமை
Sunday, November 05, 2006
தனிமை
Posted by CVR at Sunday, November 05, 2006
| Hotlinks: DiggIt! Del.icio.us
Subscribe to:
Post Comments (Atom)
14 Comments:
Unadhu kavidhai en manadhai thazhuviyadhu!! en mudharkan paraattu.
Thanks!! :)
superb!!! may b tis is a lesson 4 all abroad aspirants?
kalaasuringa thalaiva especially these lines
தலை மேலே அம்மாவின் ஸ்பரிசம்
திரும்பி பார்த்தால் காற்றுதான் முறைக்கும்
மூச்சை முட்டும் அளவு நினைவுகளின் கூட்டம்
ஆனால் கண்களில் மட்டும் கண்ணீர், துடைக்காமல் இருக்கும்
இதன் பெயர் தான் தனிமை
Thanks!
Karthi and CDK!! :)
\"அழ வேண்டும் என்று இனம் புரியா ஆவல்
காரணம் இல்லாததால் அது மனதினுள் காவல்
ஆயல்நாட்டில் அடைந்திருக்கும் இளைஞர்களின் நிலைமை
தமிழ் என்ற தோழி மட்டும் துணையிருக்கும் கொடுமை
இதன் பெயர் தான் தனிமை\
ராம், தனிமையின் கொடுமையை மிகவும் தெளிவாக, உணர்த்துகிறது உங்கள் வரிகள்.
பாராட்டுக்கள்!
[ஆயல்நாட்டில் = அயல்நாட்டில் -> I think its typo , ]
You have a very good flow in writing, keep ur gud work!
Thanks Divya !
and thanks for pointing out the typo!!
will get that corrected!! :)
hmm....its just reflecting my-mind-set CVR.
Nice one
Thanks Peri!! :-)
உங்கள மாதிரி நிறைய பேர் இருக்காங்க சார்.நானும் இது மாதிரி தான் :(
வீட்டை விட்டு தனியா இருக்கற எல்லோரும் அனுபவப்படும் விஷயம் தான் இது மேடம்!! :-)
Its a part of life you cant escape,you just got to get used to it!! :-)
உங்களின் கவிதையில் தனிமையின் வறட்சி,
உங்களின் கவிதையில் தனிமையின் கோரம்,
உங்களின் கவிதையில் தனிமையின் சலிப்பு,
உங்களின் கவிதையில் தனிமையின் வெறுமை,
உங்களின் தனிமையில் உங்கள் உள்ளத்தின் ஏக்கம்,
உங்களின் கவிதையில் தெரிகிறது அதன் தாக்கம்.
I was thinking of writing a poem on lonlyness, becoz i now know exactly what it means. Your poem speaks my heart out in every way.
Chair pottu ukandhuteenga... en mindla
//Its a part of life you cant escape,you just got to get used to it!! :-) //
Enna thathuvam!!
Post a Comment